உடுகம்பல பொசன்  சோறு தன்சல

பொசன் தினத்தை முன்னிட்டு ரெஜி ரணதுங்க அறக்கட்டளையின் ஏற்பாட்டில் பெரிய சோறு  தன்சல  நேற்று (03) நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் மினுவாங்கொடை, உடுகம்பல அலுவலகத்தில் இடம்பெற்றது.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்களின் ஆலோசனையின் பேரில், ரெஜி ரணதுங்க அறக்கட்டளையின் ஆதரவுடனும், உள்ளூர் தனவந்தர்களின் உதவியுடனும் இந்த அன்னதானம் நடைபெற்றது.

மறைந்த திரு.ரெஜி ரணதுங்க காலத்திலிருந்து வருடாந்தம் வெசாக் போயா தினத்தன்று உடுகம்பளை காரியாலயத்தில் சோற்றுப் பார்சல் தன்சல வழங்கப்பட்டு வந்ததுடன் கடந்த காலங்களில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவினால் அது தொடரப்பட்டது.

ஆனால், கடந்த வருடம் மே மாதம் 9ம் திகதி அமைச்சரின் வீடு மற்றும் அலுவலகம் போன்றவற்றை  போராட்டக்காரர்கள் எரித்து நாசம் செய்ததால், கடந்த ஆண்டு அந்த தன்சலயை நடத்த முடியவில்லை.

இந்நிகழ்வில் அமைச்சரின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள், பிரதேச மக்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.