வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை!


விளையாட்டுத்துறை அமைச்சரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை அமுல்படுத்துவதை தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

இலங்கை ரக்பி நிறுவனத்தின் தலைவர் ரிஸ்லி எலியாஸின் செயற்பாடுகளை இடைநிறுத்தி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ரக்பி நிறுவனத்தின் தலைவரால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான தீர்ப்பினை வழங்கி, மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார்  தலைமையிலான அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மனு மீதான விசாரணை முடியும் வரை இந்த இடைக்கால உத்தரவு அமலில் இருக்கும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.