நவகமுவில் பிக்குவை தாக்கிய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்!

பெளத்த பிக்கு ஒருவரையும் இரண்டு பெண்களையும் தாக்கிய அனைத்து நபர்களையும் கைது செய்யுமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் பொலிஸாருக்கு உத்தரவு.

நவகமுவ பிரதேசத்தில் பெளத்த பிக்கு ஒருவரையும் இரண்டு பெண்களையும் தாக்கிய நபர்களை கைது செய்யுமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த சம்பவம் சமூக ஊடக தளங்களில் குறிப்பிடத்தக்க கவனத்தை பெற்றுள்ளது, தாக்குதலின் வீடியோ வைரலாகி வருகிறது.

இது தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சின் உத்தரவு வருமாரு 

பெளத்த துறவி மற்றும் இரண்டு பெண்களை ஆடைகளை அவிழ்த்து தாக்கியவர்களை உடனடியாக கைது செய்யுமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் உத்தரவிட்டுள்ளார்.

ஒரு பெளத்த துறவி மற்றும் இரண்டு பெண்கள் சம்பந்தப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

ஒரு பெளத்த துறவியும் இரண்டு பெண்களும் நிர்வாணமாக்கப்பட்டு, ஒரு குழுவினரால் தடிகளால் அடிக்கப்படுவதும் இதில் இடம்பெற்றுள்ளது.

சிலர் துறவியை தடிகளால் தாக்குவதைக் காணலாம்.

சட்டத்தை கையில் எடுத்து தாக்கியவர்களை உடனடியாக கைது செய்யுமாறு மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் நவகமுவ பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி ஆகியோருக்கு பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் நேற்று (2023.07.07) உத்தரவிட்டுள்ளார்.

அவர்கள் மீது உடனடியாக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.