இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸ் நிறைவு
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 312 ஓட்டங்களை பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் ஆடிய அந்த அணி சற்று முன்னர் சகல விக்கட்டுக்களையும் இழந்து 312 ஓட்டங்களை பெற்றது.
இலங்கை அணி சாா்பில் அதிகபட்சமாக Dhananjaya de Silva 122 ஓட்டங்களையும் Angelo Mathews 64 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சாா்பில் Shaheen Shah Afridi, Naseem Shah மற்றும் Abrar Ahmed ஆகியோர் தலா 3 விக்கட்டுக்களை வீழ்த்தினர்.
கருத்துகள்
கருத்துரையிடுக