பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கான இலக்கு
உலகளாவிய வறுமையை ஒழிக்கும் வகையில் நெருக்கடியில் உள்ள நாடுகளுக்கு கடன் நிவாரணம் வழங்குவதில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.
அந்த அமைப்பின் வளர்ச்சித் திட்டம், கொவிட் பரவலால் உலக நாடுகளில் 165 மில்லியன் மக்கள் வறுமையில் வாடியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலைமையை போக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அந்த வேலைத்திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.
அடுத்த வாரம் கூடவுள்ள G20 குழுவின் நிதி அமைச்சர்கள் மாநாட்டில் நெருக்கடியில் உள்ள நாடுகளின் கடன் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தேவையான சீர்திருத்தங்களுடன் சர்வதேச கடன் மறுசீரமைப்பு குறித்தும் ஆழமாக கவனம் செலுத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம் மேலும் வலியுறுத்துகிறது.
G20 குழுவின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் மூன்றாவது கூட்டம் நேற்றும் (14) மற்றும் இன்றும்(15) இந்தியாவின் குஜராத்தில் நடைபெறுகிறது.
இதேவேளை, நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு 03 இலக்குகளை அடைய வேண்டும் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க வலியுறுத்துகின்றார்.
கடன், கடன் சேவை மற்றும் நிதித் தேவை ஆகிய அம்சங்களின் அடிப்படையில் இந்த இலக்குகளை அடைய வேண்டும் என்று அவர் கூறுகிறார்.
அதேநேரம் அடுத்த மாதம் பணவீக்கம் 07% ஆக குறையும் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள்
கருத்துரையிடுக