குழந்தைகளிடையே தட்டம்மை நோய்


இந்த நாட்களில் குழந்தைகளிடையே தட்டம்மை நோயின் தாக்கம் அதிகமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இன்று தெரண தொலைக்காட்சியில் இடம்பெற்ற செவ்வியில் பேசிய சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா, நேற்றைய நிலவரப்படி 12 சிறுவர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

காய்ச்சல் மற்றும் சிவப்பு புள்ளிகள் இந்த நோயின் அறிகுறிகளில் என்றும், இந்த நோயின் ஆபத்துகள் குறித்து மக்கள் சரியாக அறிந்திருக்கவில்லை என்றும் மருத்துவர் கூறினார்.

இதேவேளை, கடந்த சில வருடங்களில் சிறுவர்களுக்கு புற்றுநோய் பாதிப்புகள் பதிவாகி வருவதாக தெரிவித்த மருத்துவர், ஒவ்வொரு வருடமும் 19 வயதுக்குட்பட்ட 900க்கும் அதிகமான சிறுவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதுதவிர, ஆண்டுதோறும் சுமார் 100 குழந்தைகள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்படுவதாகவும், இது போன்ற பாதிப்புகள் அதிகரித்து வருவதாகவும் மருத்துவர் தெரிவித்தார்.

இவ்வாறான நிலைமைகளை எதிர்கொள்வதற்கு போசாக்கான உணவுகளை குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் எனவும், சிறுவர்கள் தொடர்ந்து விளையாடுவதை ஊக்குவிக்க வேண்டும் எனவும் தெரிவித்த வைத்தியர் தீபால் பெரேரா, குழந்தைகளை கையடக்கத்தொலைபேசியிலிருந்து விலக்கி வைப்பதே சிறந்தது எனவும் தெரிவித்தார்.

குழந்தைகளின் உணவில் எண்ணெய், சர்க்கரை போன்றவற்றை முடிந்தவரை பயன்படுத்தாமல் இருந்தால் நாளை ஆரோக்கியமான குழந்தைகள் சமூகத்தை உருவாக்கலாம் என்றும் மருத்துவர் கூறினார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.