சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு விதித்துள்ள நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் விரைவான தீர்மானங்களை மேற்கொண்டு வருவதால் எதிர்வரும் செப்டெம்பரில் இரண்டாம் கட்ட கடன் தவணையை பெற்றுக்கொள்ள முடியும் என போக்குவரத்து மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடாக சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

”சர்வதேச நாயண நிதியத்தின் முதல் தவணை கடன் மாத்திரமே இலங்கைக்கு இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளது.

அடுத்தகட்ட தவணை கடன்களை பெற்றுக்கொள்ள பல நிபந்தனைகளை நாம் நிறைவேற்ற வேண்டியுள்ளது. என்றாலும், அவர்கள் வழங்கியுள்ள பல்வேறு நிபந்தனைகளை நாம் தற்போது நிறைவேற்றியுள்ளோம்.

வரி மறுசீரமைப்பு என்பது இதில் பிரதானமான ஒன்றாகும். வரி மறுசீரமைப்பின் ஊடாக அரச வருவாய் அதிகரித்துள்ளதுடன், நட்டமீட்டும் பல்வேறு அரச நிறுவனங்களை இலாபமீட்டும் நிறுவனங்களாக மாற்றியமைப்பதற்கான பொறிமுறைகளையும் உருவாக்கியுள்ளோம்


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.