இலங்கைக்கு கிடைக்கவுள்ள 333 மில்லியன் அமெரிக்க டொலர்கள்

இலங்கைக்கு கிடைக்கவுள்ள 333 மில்லியன் அமெரிக்க டொலர்கள்

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் இரண்டாம் தவணையான 333 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கப்பெற உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

 அடுத்த மாதத்தின் ஆரம்பத்தில் இந்த தொகை அரசாங்கத்திற்கு கிடைக்கப் பெறும் என்று அவர் குறிப்பிட்டார்.

 சர்வதேச நாணய நிதியத்தினால் முன்வைக்கப்பட்ட ஊழல் ஒழிப்பு, நிதி ஒழுக்கத்தைப் பேணல் மற்றும் வெளிப்படைத் தன்மையை உருவாக்குதல் போன்ற முன்மொழிவுளை நடைமுறைப்படுத்துவதற்காக அரசினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளே இதற்கு பிரதான காரணமென ஷெஹான் சேமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

 அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் சிறிலங்காவின் பொருளாதாரம் தற்போது சரியான பாதையில் பயணிப்பதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

 மக்களின் வாழ்க்கைச் செலவு எதிர்காலத்தில் மேலும் குறைவடைய வாய்ப்புக்கள் உள்ளதாகவும் அவர் கூறினார்.

 இந்த கடனுதவியின் வாயிலாக எதிர்காலத்தில் வங்கிகளில் வட்டி வீதத்தை 9% இற்கு கீழ் கொண்டு வர சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என பேராசிரியர் ஆஷு மாரசிங்க வலியுறுத்தியதையும் ஷெஹான் சேமசிங்க சுட்டிக்காட்டினார். 

கருத்துகள்