இறக்குமதித் தடை முழுமையாக நீக்கப்படும் : செஹான் சேமசிங்க

இலங்கையில் அமுலில் இருக்கின்ற இறக்குமதி தடையானது முழுமையாக நீக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் அனைத்து பொருட்களுக்குமான இறக்குமதி தடை நீக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

செப்டம்பரில் மேலும் 300 பொருட்கள் மீதான இறக்குமதி தடை நீக்கப்படும் என ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


கருத்துகள்