வாகன விபத்தில் ஆசிரியர் உயிரிழப்பு

மட்டக்களப்பு - கொழும்பு வீதியில் ஓட்டமாவடி – புனாணை எனும் இடத்தில் நேற்று (24) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஆசிரியரொருவர் மரணமடைந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

ரிதிதென்னை பிரதேசத்திலிருந்து ஓட்டமாவடி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் அக்கரைப்பற்றிலிருந்து கொழும்பு நோக்கிச்சென்ற தனியார் சொகுசு பஸ் ஒன்றும் புனானை பிரதேசத்தில் வைத்து நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.


ரிதிதென்ன இக்ரஹ் வித்தியாலயத்தின் ஆங்கிலப்பாட ஆசிரியரான ஸர்பராஸ் ஹூஸைன் முஹம்மது அஸாம் (வயது – 25) என்பவரே மரணமடைந்துள்ளார்.


மற்றைய இளைஞரான புஹாரி நுஸைக் அஹமட் காயமடைந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


மரணமடைந்த ஸர்பராஸ் ஹூஸைன் முஹம்மது ஆஸாம் அண்மையில் வழங்கப்பட்ட ஆங்கில டிப்ளோமா ஆசிரியர் நியமனம் பெற்று ரிதிதென்ன இக்ரஹ் வித்தியாலயத்தில் கடமையாற்றி வந்தமை குறிப்பிடத்தக்து.


பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவ்விபத்து தொடர்பான விசாரனைகளை வாழைச்சேனை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.