பிரபல நடிகர் மறைவு – அதிர்ச்சியில் திரையுலகம்!
 

தமிழில் டி.ராஜேந்தரின் ஒரு தலைராகம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே அறிமுகமானவர் கைலாஷ் நாத். ரஜினியின் வள்ளி, பாலைவனச்சோலை, சங்கமம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் மிமிக்ரி கலைஞராகவும், நாடக நடிகராகவும் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். கடந்த 1977 ஆம் ஆண்டு தனது 19 வயதில் விடருணா மொட்டுகள் என்ற மலையாள படத்தின் மூலம் அறிமுகமான இவர் 163 படங்களில் நடித்துள்ளார். அதில் பெரும்பாலானவை காமெடி கதாப்பாத்திரங்கள். இவர் 90 தமிழ் படங்களில் நடித்திருக்கிறார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கல்லீரல் பிரச்னை காரணமாக சிகிச்சைபெற்றுவந்த கைலாஷ் நாத் கடந்த வியாழக்கிழமை மரணமடைந்தார். அவருக்கு வயது 65. அவரது மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
2021ல் ஏற்கனவே சிறிதளவிலான மாரடைப்பு ஏற்பட்டிருந்தது. இவருடைய கல்லீரல் சிகிச்சைக்கு பெருமளவில் பணம் தேவைப்பட்ட நிலையில் நடிகர்கள் சிலர் சேர்ந்து அவருக்கு உதவியது நினைவுகூறத்தக்கது. இவர் பல டிவி தொடர்களிலும் நடித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.