குவைட் நாட்டின் பைத்துல் ஸஹாத் நிறுவனத்தின் நிதிப் பங்களிப்பில் ISRC நிறுவனத்தின் அனுசரணையில் கள்-எலிய இஸ்லாமியப் பெண்கள் அரபுக் கல்லூரியில் சுமார் 95 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மாணவர் விடுதி கட்டிடமானது இன்று (12) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் கௌரவ காதர் மஸ்தான் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு குறித்த மாணவர் விடுதி காட்டிடத்தை திறந்து வைத்தார்.
குறித்த நிகழ்வில் கள்-எலிய பெண்கள் அரபிபுக் கல்லூரியின் நிர்வாக சபைத் தலைவர், கலாசாலை அதிபர், குவைட் நாட்டின் பைத்துல் ஸஹாத் நிறுவனத்தின் பணிப்பாளர், இலங்கைக்கான குவைத் தூதரக அதிகாரி,ISRC நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் உள்ளிட்ட பலரும் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
#ஊடகப்பிரிவு#
கருத்துகள்
கருத்துரையிடுக