தெஹிவளையில் துப்பாக்கிச் சூடு

தெஹிவளையில் துப்பாக்கிச் சூடு

தெஹிவளை ஆபர்ன் பிளேஸில் நேற்றிரவு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் 30 வயதுடைய நபர் ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெஹிவளை பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள்