ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
கடுவலை வெவ வீதியில் உள்ள முட்புதரில் இருந்து அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் நிர்வாண சடலத்தை கடுவலை  பொலிஸார் மீட்டுள்ளனர்.

 30 முதல் 40 வயதிற்கும் இடைப்பட்டவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலத்தில் தாக்கப்பட்டதற்கான அடையாளங்களும் காணப்படுவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

தற்போது அந்த இடத்தில் பொலிஸ் பாதுகாப்பு பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், நுகேகொடை குற்ற விசாரணை அதிகாரிகள் மற்றும் நீதவான் விசாரணையும் நடத்தப்படவுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கடுவலை  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.