சாராயம்  அருந்திவிட்டு குடி போதையில்  பாடசாலைக்கு வந்த மாணவி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்

மதுபானம் அருந்திவிட்டு பாடசாலைக்கு வந்த 14 வயதுடைய பாடசாலை மாணவியொருவர் கெக்கிராவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கெக்கிராவ கல்வி வலயத்திற்குட்பட்ட கல்லூரி ஒன்றிற்கு முன்பாக பிரதான வீதியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த கெக்கிராவ பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் குறித்த மாணவியின் நடவடிக்கை மீது சந்தேகம் கொண்டு அவரை கைது செய்துள்ளனர்.

பின்னர், குறித்த மாணவி கெக்கிராவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.ஓ.பி.சுமித் முனசிங்கவிடம் அழைத்து வரப்பட்டு ஒப்படைக்கப்பட்ட பின்னர், மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கெக்கிராவ பொலிஸார், கெக்கிராவ நீதவான் நீதிமன்றத்தின் நன்னடத்தை அலுவலகத்திற்கு அறிவித்ததையடுத்து, சம்பவம் தொடர்பில் தனியான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கெக்கிராவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சுமித் முனசிங்கவின் பணிப்புரைக்கமைய பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.