இலங்கை ரூபாவின் பெறுமதி சடுதியாக அதிகரிப்பு
நேற்றையதினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (16) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சடுதியாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்று (16) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 327.82 ரூபாவாகவும், கொள்வனவு விலை 314.45 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 244.00 ரூபாவாகவும், கொள்வனவு விலை 231.29 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 358.62 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 341.54 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 416.90 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 397.98 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக