ஜெயிலர் படத்தில் RCB-ன் ஜெர்ஸி காட்சியை நீக்க வேண்டும் ; உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
ஜெயிலர் படத்தில் “ஆர்சிபி அணியின் ஜெர்ஸி” (Royal Challengers Bangalore) அணிந்து நடிகர் ஒருவர் பெண்களுக்கு எதிராக வெளியிட்ட கருத்துக்களை நீக்குமாறு டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
நெல்சன் இயக்கத்தில் 10ம் திகதி வெளியான ஜெயிலர் படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியன் என்கிற சிறை ஜெயிலராக நடித்துள்ளார்.
இந்நிலையில், “ஜெயிலர்” படத்தில், ஆர்சிபி அணியின் ஜெர்ஸி அணிந்து நடிகர் ஒருவர் பெண்களுக்கு எதிராக சில கருத்துக்களை பேசிய காட்சிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுபோன்று எங்களின் ஜெர்சியை அணிந்து கொண்டு பேசுவதால், எங்கள் அணியின் நட்பெயர் கெட்டுப்போகும் என்று ஐபிஎல் அணியின் தரப்பில் இருந்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நேற்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, வழக்கை விசாரித்த நீதிபதி பிரதீபா எம் சிங் செப்டம்பர் 1ஆம் திகதி முதல், அந்த குறிப்பிட்ட காட்சியை நீக்க கோரி தயாரிப்பாளருக்கு உத்தரவிட்டார்.
மேலும், தொலைக்காட்சி மற்றும் ஓடிடி தளங்களில் இந்த படம் ஒளிபரப்பாகும் போது இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கருத்துகள்
கருத்துரையிடுக