இந்த ஆண்டின் முதல் அரையாண்டு காலப்பகுதியில் சுமார் 170,000 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று சென்றுள்ளனர்.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் ஜூலை மாதம் 31ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 171,015 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று நாட்டை விட்டு சென்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஜூலை மாதம் மட்டும் 24,578 பேர் வெளிநாட்டில் வேலைவாய்ப்புகள் பெற்று சென்றுள்ளனர்.
கடந்த 2022ஆம் ஆண்டில் மொத்தமாக 311,056 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று சென்றுள்ளனர்.
இதேவேளை கடந்த ஜூலை மாதம் வெளிநாடுகளில் வேலை செய்யும் இலங்கையர்களினால் அனுப்பி வைக்கப்பட்ட மொத்த பணம் 541 மில்லியன் டொலர் என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட மொத்த பணம் 279.5 மில்லியன் டாலர் என தெரிவிக்கப்படுகிறது.
ஒப்பீட்டளவில் இந்த ஆண்டில் வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கைர்களினால் அனுப்பி வைக்கப்படும் பணத்தில் பாரிய அளவு அதிகரிப்பு பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
கருத்துரையிடுக