06 மாதங்கள் முதல் 03 வயது வரையிலான குழந்தைகளுக்கான மூன்று போஷாக்கு மேலதிக உணவு விநியோகம் பல மாதங்களாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அந்த செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பில் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் வினவியதோடு, மீள் விநியோகம் தொடர்பில் அடுத்த வாரம் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, சுமார் ஒரு வருட காலமாக குழந்தைகளுக்கு திரிபோஷ விநியோகம் செய்யும் நடவடிக்கைகள் தடைபட்டுள்ளதாக அரசாங்க குடும்ப சுகாதார சேவைகள் சங்கத்தின் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்தார்.

எனவே, திரிபோஷ விநியோகத்தை விரைவில் தொடங்குமாறு அரசை கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்திருந்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.