பாடசாலை மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாட்டை தீர்ப்பதற்கு கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு காலை மற்றும் மாலை வேளைகளில் புதிய பசும்பால் வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க தேசிய கால்நடை அபிவிருத்தி சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த வேலைத்திட்டத்தின் முதற்கட்ட திறப்பு விழா நாரஹேன்பிட்டியில் உள்ள தேசிய கால்நடை அபிவிருத்திச் சபையின் வளாகத்தில் விவசாய அமைச்சர் திரு.மகிந்த அமரவீரவின் தலைமையில் இடம்பெற்றது.

திரவ பசும்பாலை 0117 173 984 என்ற எண்ணிற்கு அழைத்து பெற்றுக்கொள்ளலாம்.

அதனடிப்படையில், கொழும்பு நகர எல்லை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு மோட்டார் சைக்கிள்கள் மூலம் முன்பதிவுகளை முன்னெடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேசிய கால்நடை அபிவிருத்தி சபையின் தலைவர் பேராசிரியர் எச்.டபிள்யூ.சிரில் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.