வெலிகமவை சூழவுள்ள கடற்பரப்பில் கடல் அலைகளின் இயற்கையான நிறம் கரும்பழுப்பு நிறத்திற்கு மாறியுள்ளதாகவும், இதன் காரணமாக அப்பகுதி மக்கள் அசாத்திய அச்சத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடல் அலைகளின் இந்த திடீர் மாற்றத்தால் மக்கள் மத்தியில் பல்வேறு வதந்திகள் பரவி வருவதாகவும் தெரியவந்துள்ளது.
இந்நாட்களில் மழை பெய்வதால் ஆறுகளின் தோற்றம் மாறி பாசிகள் பெருகி வருவதால், கடல் அலைகளின் நிறத்தில் மாற்றத்தை எதிர்பார்க்கலாம் என நாரா நிறுவனத்தின் சிரேஷ்ட விஞ்ஞானி உபுல் லியனகே தெரிவித்துள்ளார்.
எனினும், நீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு, ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றும், எனவே யாரும் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்
கருத்துகள்
கருத்துரையிடுக