நமது நாட்டில் பல்வேறு இனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மதங்களை பின்பற்றும் பலர் உள்ளனர் என்றும், எனவே நாம் ஒரு நாடாக ஒன்றிணைந்து ஒன்றுபட வேண்டும் என்றும்,பிரிவினைவாதம் ஒன்றே இந்த நாட்டை அழிக்கும் என்பதனால்,எந்த ஒரு இனத்தையோ,

மதத்தையோ சேர்ந்த யாரும் தீவிரவாதத்தை ஏற்கக் கூடாது என்றும், அனைத்து இனங்களையும் மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் விசுவாசிகள் எந்த பேதமும் இன்றி ஒரே தாயின் பிள்ளைகள் போல் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.


காலி ஸாஹிரா கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


தீவிரவாதத்திற்கு போலவே எந்த பயங்கரவாதத்திற்கும் எமது நாட்டில் இடமில்லை என்றும்,எனவே அனைத்து இனங்களும் மதங்களும் ஒன்றிணைந்து அனைத்து இனங்களிலும் மதங்களிலும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் தீவிரவாதத்தை தோற்கடிக்க வேண்டும் என்றும்,கடந்த காலங்களில் தீவிரவாதத்தை அரசியல் நோக்கத்திற்காக சில கட்சிகள் பயன்படுத்தின என்றும் அவர் தெரிவித்தார்.


ஜனாதிபதி கதிரைக்கு செல்லும் ஆசையில் முழு நாட்டையும் துண்டு துண்டாக உடைத்து தேசிய ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் அவர்கள் அழித்தார்கள் என்றும்,ஜனாதிபதி கனவுக்காக,யுத்த வெற்றியின் பின்னர் அனைத்து இனங்களும் சமூகங்களும் ஒன்றிணைந்து ஒரு நாடாக அபிவிருத்தி செய்வதற்கு பதிலாக இனவாதத்தைக் கிளறிவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.