கடந்த 5 வருடங்களை ஒப்பிடும் போது இந்த வருடம் 86,000 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வருமானம் கிடைத்துள்ளதாக ஏற்றுமதி விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

 முக்கியமாக  கறுவாப்பட்டை, மிளகு மற்றும் கிராம்பு ஏற்றுமதி மூலம் இந்தத் தொகை ஈட்டப்பட்டதாக அதன் அபிவிருத்திப் பணிப்பாளர் உபுல் ரணவீர குறிப்பிடுகின்றார்.

 மேலும் கருத்து தெரிவித்த அவர், "கடந்த 5 ஆண்டுகளைப் ஒப்பிடுகையில் ஏற்றுமதி விவசாயத்துறையுடன் தொடர்புடைய பயிர்களை ஏற்றுமதி செய்ததன் மூலம் அதிகபட்ச அன்னியச் செலாவணி இந்த ஆண்டே ஈட்டப்பட்டுள்ளது.அதன்படி, ஜூன் 2023 வரை 34,771 மெட்ரிக் டொன் ஏற்றுமதி செய்யப்பட்டு,  86,680 மில்லியன் ரூபாய் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது. 

 இதில்  கறுவாப்பட்டை, கிராம்பு மற்றும் மிளகு போன்ற பயிர்கள் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளன, மேலும் பாக்கு ஏற்றுமதி மூலமும் அதிக அந்நிய செலாவணி பெறப்பட்டுள்ளது" என்றார

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.