கொழும்பு 02 இல் அமைந்துள்ள டீ பி ஜாயா சாஹிரா கல்லூரியானது போதிய அடிப்படை வசதிகள் இன்றி மாணவர்கள் பல வருடங்களாக கெண்டைனர் பெட்டிகளை வகுப்பறையாக பயன்படுத்தி வந்தனர்.
இந்த அவல நிலையை இல்லாதொழித்து அந்த பாடசாலைக்கு 04 மாடிகளை கொண்ட கட்டடம் ஒன்றை பெற்று கொடுக்க வேண்டும் என அயராது முயற்சி செய்துகொண்டு இருக்கும் முஸ்லீம் காங்கிரஸ் மேல் மாகாண சபை கௌரவ உறுப்பினர் அர்ஷாத் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் 04 மாடிகளுக்கு அடித்தளம் இடப்பட்டு ,முதல் கட்டமாக ஒரு தளத்தை பூர்த்தி செய்வதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வேலைகள் முடிவுற்றுள்ளன அதை உத்தியோக பூர்வமாக பாவனைக்கு வழங்கும் நிகழ்வு விரைவில் இடம்பெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.