தோட்டத் தொழிலாளர்களின் வேதன உயர்வு குறித்த வர்த்தமானி இடைநிறுத்தம்!

www.paewai.com
By -
0

தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தினை அதிகரிக்கும் வர்த்தமானி அறிவித்தலினை வெளியிடுவதை தற்காலிகமாக நிறுத்துவதற்கு பிரதமர் அவர்கள் இணங்கியதாக தமிழ் முற்போக்கு கூட்டணி தெரிவிக்கின்றது. 


கௌரவ அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் அமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் பழனி திகாம்பரம் இதனை தெரிவித்தார்.

அதனடிப்படையில் பெப்ரவரி மாதம் 05ம் திகதி வரை அவ்வர்த்தமானியில் வெளியிடப்படாது என அமைச்சர் மனோ கணேஷன் தெரிவித்தார்.


தோட்டத் தொழிலாளர்களின் வேதன உயர்வு தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியினை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று (01) பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களுடன் தீர்மானமிக்க பேச்சுவார்த்தையொன்றில் அலரிமாளிகையில் ஈடுபட்டனர்.






கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)