சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்குத் தேவையான வைத்திய சான்றிதழைப் பெற நாளை முதல் ஒன்லைன் மூலம் நேரம் ஒதுக்க முடியும்

Rihmy Hakeem
By -
0
சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு அவசியமான வைத்திய சான்றிதழைப் பெற்றுக்கொள்வதற்கான திகதியையும், நேரத்தையும் ஒன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளும் வசதி நாளை முதல் நடைமுறைக்கு வரும் என்று போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த சேவை கடந்த வெள்ளிக்கிழமை முதல் பரீட்சார்த்த முயற்சியில் இருந்தது. www.ntmi.lk என்ற இணையத்தளத்தின் மூலம் நாளை முதல் வைத்திய சான்றிதழைப் பெற்றுக்கொள்வதற்கான நேரத்தை ஒதுக்கிக் கொள்ள முடியும். 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)