மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதட்டம் - இலங்கை ஆழ்ந்த கவலை

Rihmy Hakeem
By -
0
மூத்த ஈரானிய தலைவர் ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து, மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதட்டம் தொடர்பில் இலங்கை ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக வெளிநாட்டு உறவுகள் அமைச்சு ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கு எதிரான அச்சுறுத்தலைக் குறைப்பதற்கு அனைத்து தரப்பினரும் மிகுந்த கட்டுப்பாட்டுடன் செயல்படவும், ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகள் மூலமாக, அமைதியும் பாதுகாப்பும் பேணப்பட வேண்டுமென இலங்கை வலியுறுத்துவதாகவும் வெளிநாட்டு உறவுகள் அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

AdaDerana 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)