அமெரிக்க தாக்குதலில் ஈரானின் சக்திவாய்ந்த இராணுவ ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி பலி ; மத்திய கிழக்கில் பதற்றம்

Rihmy Hakeem
By -
0


ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க படைகள் டிரோன் விமானம் மூலம் நடத்திய தாக்குதலில் முக்கியமான ஈரான் தலைவர்கள் சிலர் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார்.
ஈரான் மற்றும் ஈராக் இடையே தற்போது மிகப்பெரிய அளவில் பிரச்சனை நிகழ்ந்து வருகிறது. ஈராக்கில் உள்ள ஈரான் படைகள் பல தற்போது அங்கு பாக்தாத்தில் போர் செய்ய தயார் ஆகி வருகிறது.
ஈராக்கில் உள்ள ஈரான் படைகள் ஏற்கனவே அங்கிருக்கும் அமெரிக்க தூதரகத்தை கைப்பற்றி உள்ளது. இதனால் அமெரிக்க தூதரகம் அருகே பெரிய அளவில் அமெரிக்க ராணுவ படைகள் குவிக்கப்பட்டுள்ளது.

தலைவர்கள் நிலை

இந்த ஈரான் படைகள் மீது அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. டிரோன் விமானங்கள் மூலம் அமெரிக்க படைகள் தொடர்ந்து ஈரான் தலைவர்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஈராக்கில் உள்ள ஈரான் தலைவர்கள்தான் இப்படி குறி வைக்கப்பட்டு வருகிறது.
 
என்ன

இன்று

இந்த நிலையில் இன்று அதிகாலை அமெரிக்க ராணுவ படை இரண்டு டிரோன் விமானங்கள் மூலம் ஈராக்கில் தாக்குதல் நடத்தியது. ஈராக்கில் உள்ள பாக்தாத் விமான நிலையத்திற்கு அருகே சென்ற இரண்டு வாகனங்களை தாக்கி அளித்தது. இதில் மொத்தம் 9 பேர் பலியானார்கள்.

ஈரான் படை

இந்த தாக்குதலில் ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார். இவர்தான் ஈரானில் மிகவும் சக்தி வாய்ந்த ராணுவ தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஈரான் மிலிட்டரி கமாண்டர் அபு மஹ்தி அல் முஹாண்டிஸும் கொலை செய்யப்பட்டார்.
பதற்றம்

மோசம்

அதேபோல் மிக முக்கியமான ஈரான் விருந்தாளிகள் சிலரும், மூத்த தலைவர்களும் இதில் கொலை செய்யப்பட்டுள்ளனராம். இதனால் தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் மிகவும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. ஈரானிலும்,ஈராக்கிலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அங்கு தற்போது அமெரிக்க ராணுவ படைகள் அதிக அளவில் குவிக்கப்பட்டு வருகிறது.

நன்றி - வன் இந்தியா 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)