முச்சக்கர வண்டிக்கான கட்டணம் குறைப்பு

Rihmy Hakeem
By -
0
அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நிவாரணங்களின் பெறுபேறாக முச்சக்கர வண்டிக்கான கட்டணத்தை குறைப்பதற்கு முச்சக்கர வண்டி உரிமையளர்களும் தொழிற்சங்கமும் தீர்மானித்துள்ளது.

முதலாவது 1 கிலோ மீற்றருக்கான கட்டணத்தை 10 ரூபாவினாலும், 2 ஆவது கிலோ மீற்றருக்கான கட்டணத்தை 5 ரூபாவினாலும் குறைப்பதற்கு தீர்மானித்திருப்பதாக அகில இலங்கை சுய தொழில் முச்சக்கர வண்டி சங்கத்தின் தலைவர் சுணில் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

முச்சக்கர வண்டிகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்திய புகை சான்றிதழுக்கான வரி குறைக்கப்பட்டமை, காபன் வரி நீக்கப்பட்டமை, வரி குறைக்கப்பட்டமை இதற்கு மேலதிகமாக பங்கு சந்தை விலை குறைவடைந்தமை போன்றவற்றின் அடிப்படையில் இந்த கட்டண குறைவு இடம்பெற்றிருப்பதாக தெரிவித்தார்.

50 ரூபாவிற்கும் 40 ரூபாவிற்கும் இடைப்பட்ட முச்சக்கர வண்டி சேவையை பெற்றுக்கொள்ளுமாறு தாம் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்வதாக அகில இலங்கை சுய தொழில் முச்சக்கர வண்டிகளின் சங்க தலைவர் ஜயவர்தன மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பாக அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்க தலைவர் சுதில் ஜயருக் கருத்து தெரிவிக்கையில் முச்சக்கர வண்டி கட்டணத்துக்கான விலைச் சூத்திரம் தயாரிப்பதற்கு முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் இதுவரையில் பதிவு செய்யப்பட்டுள்ள முச்சக்கர வண்டிகளின் எண்ணிக்கை 12 இலட்சம் என குறிப்பிடப்பட்டுள்ளது இவற்றில் 10 இலட்சம் முச்சக்கர வண்டிகள் பயணிகள் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

அததெரண 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)