லக்ஷ்மன் கதிர்காமர் கொலை வழக்கில் இலங்கையருக்கு ஜேர்மனில் சிறைத்தண்டனை

Rihmy Hakeem
By -
0
முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை வழக்கில் இலங்கையர் ஒருவருக்கு ஜேர்மன் நீதிமன்றம் சிறைத் தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் எல்ரிரிஈ உறுப்பினர் ஒருவருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த நபரை 6 வருடங்கள், 10 மாதங்கள் சிறையில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரை படுகொலை செய்ய தகவல் வழங்கியதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு ஜேர்மனில் புகழிடம் கோரிய ஜ.நவநீதன் எனும் இலங்கை அகதிக்கே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

AdaDerana 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)