8 வது பாராளுமன்றத்தின் 4 வது கூட்டத் தொடருக்கான நடவடிக்கைகள் சற்று முன்னர் ஆரம்பமானது.
தனக்குள்ள அதிகாரங்களுக்கு அமைய டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி பாராளுமன்றத்தின் 3 வது அமர்வை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முடிவுக்கு கொண்டு வந்தார்.
அதற்கமைய பாராளுமன்றத்தின் 4 வது கூட்டத் தொடருக்கான நடவடிக்கைகள் இன்று ஆரம்பமானது.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் ஜனாதிபதி வரவேற்கப்பட்டார்.
பின்னர் ஜயமங்கள கீதம் இசைக்கப்பட்டது. தற்போது ஜனாதிபதியின் உரை இடம்பெறுகிறது.
Source

