முன்னாள் மாநகர சபை உறுப்பினர்
ஏ.எம். பறக்கத்துள்ளாஹ் எழுதிய
கல்முனை உள்ளூராட்சி நிருவாகம்
250 வருட வரலாற்றுப் பதிவுகள்
நூல் வெளியீடு எதிர்வரும் 2020.02.22 சனிக்கிழமை பி.ப. 4.15 மணிக்கு, கல்முனை மஃமூத் மகளீர் கல்லூரி, சேர் றாசிக் பரீட் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
முன்னாள் பட்டின சபை தலைவர் ஏ.எம். முகைதீன் பாவா முன்னிலையில், மணிப்புலவர் மருதூர் மஜீத்தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை வெளிநாட்டுச் சேவை, சிரேஷ்ட இராஜதந்திரி ஏ.எல்.ஏ. அஸீஸ் கலந்து கொள்கிறார்.
பேராதனை பல்கலைக்கழக மெய்யியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் முபிஷால் அபூமக்கர் நூல்பற்றிய உரை நிகழ்ததவுள்ளார். அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஜே. லியாக்கத் அலி மற்றும் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் குஞ்சித்தம்பி ஏகாம்பரம் ஆகியோர் சிறப்புரையும் உரை நிகத்தவுள்ளனர்.
நூலாசிரியர் ஏற்புரை நிகந்தஙுள்ளார். இந்நிகழ்வை கதீர், நபீல் ஆகியோர் ஒருங்கிணைக்க, மரபுரிமை ஆய்வு வட்டம் ஏற்பாடு செய்துள்ளது.

