பொஹொட்டுவ கூட்டணியில் மேலும் 5 கட்சிகள் இணைந்து கொண்டன

Rihmy Hakeem
By -
0
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள ஶ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன கூட்டணியில் மேலும் 05 அரசியல் கட்சிகள் நேற்று (25) இணைந்துக் கொண்டதாக ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.


ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இன்று (26) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

அதன்படி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் கட்சி உள்ளிட்ட 5 கட்சிகள் புதிய கூட்டணியுடன் இணைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதன்படி, இதுவரை 14 கட்சிகள் ஶ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன கூட்டணியில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

AdaDerana.lk 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)