நாடளாவிய ரீதியில் நடைபெற்ற இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 72ம் சுதந்திர தின நிகழ்வு "பாதுகாப்பான தேசம், சுபீட்சமான நாடு" எனும் தொனிப் பொருளில் கீழ் கண்டி மாவட்டம், பாத்த ஹேவாஹெட்ட தேர்தல் தொகுதியில் அமையப்பெற்றுள்ள தெல்தோட்டைப் பிரதேசத்தின் மஹ்பலுல் உலமா அறபுக்கல்லூரி வளாகத்தில் சுதந்திர தினத்தன்று இடம்பெற்றது.
மேற்படி நிகழ்ச்சியில் கலஹா பொலிஸ் அதிகாரிகள், சர்வ மதத் தலைவர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பள்ளிவாயல் நிருவாகிகள், அரபுக் கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
தேசிய கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில் குறிப்பாக
72 தென்னை மரக்கன்றுகள் நடப்பட்டதுடன் அதிதிகளின் விஷேட உரைகளும் இடம்பெற்றதுடன், மேற்படி நிகழ்வினை றம்ய லங்கா தெல்தோட்டைக் கிளை, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா (தெல்தோட்டை) மற்றும் மஹ்பலுல் உலமா அறபுக்கல்லூரி ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.