நாளைய எமது சமூகத்தில் ஆளுமையுள்ள தலைமைகளை அடையாளம் காணும் தேர்தலாகவே இன்று நடைபெறவிருக்கும் இளைஞர் பாராளுமன்ற தேர்தலை நான் பார்க்கின்றேன். இத்தேர்தல் களத்தில் வேட்பாளர்களாகிய உங்களுக்கு பலத்த போட்டிகள் காணப்பட்டாலும் அதனை சாதுர்யமான கையாண்டு, தாங்கள் வெற்றி பெற வாழ்த்துகின்றேன் என முன்னாள் இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தனது வாழ்;த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவ்வாழ்த்துச் செய்தியில் அவர் குறிப்பிடுகையில்,
இன்று நடைபெறவிருக்கும் இளைஞர்; பாராளுமன்ற தேர்தலானது ஜனநாயகத்தின் பால் இளைஞர்;களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி, நாட்டின் ஏனைய தேர்தல்களின் போது அவர்களை அரசியல் கட்சிகள் முறையற்ற விதத்தில் பயன்படுத்தும் கலாசார இல்லாமலாக்கப்பட்டு நாட்டில் எதிர்காலத்தில் ஜனநாயக தேர்தலுக்கு வழியேற்படும் என நம்புகின்றேன்.
இளைஞர்கள் இதன் மூலம் நாட்டின் பாராளுமன்ற நடைமுறை, அரசியல் யாப்பு, நாட்டின் சட்ட ஒழுங்கு விதிகள் உள்ளிட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் பற்றி அறிந்து கொள்ளவும் தங்களது ஆளுமைகளை வளர்த்துக் கொள்ள முடியும்.
நாளைய நாட்டிக்கான சிறந்த தலைமைகளை அடையாளம் காணுவதற்கான களமாக இளைஞர்; பாராளுமன்ற தேர்தலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை இளைஞர்;கள் நன்கறிந்து தங்களது வாக்குகளை ஆளுமையுள்ள சமூகப் பற்றாளனை தங்களது பிரதிநிதிகளாக தெரிவுசெய்ய வேண்டும்.
இன்று நாட்டில் காணப்படும் இனவாதம், மதவாதம், பிரதேச வாதம் என்பன இத்தேர்தலில் தெரிவாகும் இளைஞர்; பாராளுமன்ற உறுப்பினர்களால் தேற்கடிக்கப்பட வேண்டும் என்பதே எனது அவாபாகும். நாட்டினை கட்டியெழுப்ப அனைவரும் மதங்கள் கடந்து நாட்டிக்காக உழைக்க வேண்டும்.
இத்தேர்தல் களத்தில் வேட்பாளர்களாகிய உங்களுக்கு பலத்த போட்டிகள் காணப்பட்டாலும் அதனை சாதுர்யமான கையாண்டு, தாங்கள் வெற்றி பெற வாழ்த்துகின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
-ஊடகப் பிரிவு-

