அரசு அல்லாத உயர் கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு கல்வி நெறியை தொடர்வதற்கு வட்டி அற்ற கடனை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பங்களை இன்று முதல் சமர்ப்பிக்க முடியும்.
2016 , 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் உயர்தர பரீட்சைக்கு தோற்றி அரசாங்க பல்கலைக்கழகங்களில் அனுமதியை பெற்றுக்கொள்வதற்கான தகுதியைப் பெறாத மாணவர்கள் இதற்காக விண்ணப்பிக்க முடியும்.
உயர்தர பரீட்சையில் ஆகக் குறைந்தது 3 பாடங்களில் சித்தி பெற்ற மாணவர்கள் உயர் கல்வி அமைச்சின் இணையத்தளத்தின் ஊடாக மார்ச் 23 ஆம் திகதி வரையில் இதற்காக விண்ணப்பிக்க முடியும்.
8 இலட்சம் வரையில் இதற்கான கடனை பெற்றுக்கொள்ள முடியும். 3 தொடக்கம் 4 வருடங்களில் இந்த கடனை திருப்பிச் செலுத்த முடியும். இது தொடர்பான மேலதிக விபரங்களை சுபஹ மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வேலைத்திட்டம்-2019-2021, http://www.moe.gov.lk/tamil/index.php option=com_content&view=category&id=435&Itemid=1167 என்ற இணையத்தளத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)

