கடவத்தை பொலிஸ் கான்ஸ்டபிள் கொலை?

Rihmy Hakeem
By -
0
கடவத்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் காணாமல் போன பொலிஸ் கான்ஸ்டபிள் கொலை செய்யப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இன்று (18) 3 பொலிஸ் குழுக்கள் குளியாபிட்டிய கங்கானிமுல்ல காட்டுப்பகுதியை சோதனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது காட்டுப்பகுதியில் இரத்தக் கறைகள் காணப்படக்கூடியதாக இருப்பினும் குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளின் சடலமோ அல்லது வேறு பொருட்களோ கண்டுபிடிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

கடவத்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 37 வயதுடைய ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

கடந்த 16 ஆம் திகதி முதல் அவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் கடவத்த பகுதியில் உள்ள பெண் ஒருவருடன் கள்ளத் தொடர்பு வைத்திருப்பதாகவும் குறித்த பெண்ணின் மகன் அவரை கடத்தி கொலை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


adaderana.lk

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)