முதலாவது போட்டியில் இலங்கை அணி வெற்றி

Rihmy Hakeem
By -
0
சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணி மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.


நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 289 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.

துடுப்பாட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்ப்பில் ஹேப் 115 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

பந்து வீச்சில் இசுரு உதான 3 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49. ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 290 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்ப்பில் திமுத் கருணாரத்ன 52 ஓட்டங்களையும், அவிஷ்க பெர்ணான்டோ ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்துவீச்சில் அல்சாரி ஜோசப் 3 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

இப்போட்டி கொழும்பு எஸ்.எஸ்.சி.மைதானத்தில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

AdaDerana.lk 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)