லுணுகம்வெஹெர பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தொன்றில் 6 பேர் உயிரிழந்ததுடன் 3 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கதிர்காம யாத்திரையிலிருந்து வந்த வேன் ஒன்று இன்று (09) அதிகாலை பாதையிலிருந்து விலகி அருகிலுள்ள மரமொன்றில் மோதிய நிலையில் மேற்படி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
காயமடைந்தவர்களுள் இருவர் ஹம்பாந்தோட்டை மாவட்ட பெரிய வைத்தியசாலையிலும் ஒருவர் தெபரவெவ - திஸ்ஸமஹாராம ஆதார வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களுள் இருவர் ஹம்பாந்தோட்டை மாவட்ட பெரிய வைத்தியசாலையிலும் ஒருவர் தெபரவெவ - திஸ்ஸமஹாராம ஆதார வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.