8 மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் விதிக்கப்பட்ட ஊரடங்கு இன்று காலை நீக்கம்

Rihmy Hakeem
By -
0
நாடு முழுவதிலும் நடைமுறைப்படுத்தப்பட்ட ( 2020.03.20 ஆம் திகதி 18.00 மணி தொடக்கம் 2020.03.23ஆம் திகதி 06.00 மணி) வரையிலான பொலிஸ் ஊரடங்கு சட்டம் கீழ்கண்ட பிரதேசங்களில் நாளை (2020.03.24) 06.00 மணியுடன் நீக்கப்படுகிறது.


1. கொழும்பு மாவட்டம்
2. கம்பஹா மாவட்டம்
3. புத்தளம் மாவட்டம்
4. மன்னார் மாவட்டம்
5. வவுனியா மாவட்டம்
6. முல்லைத்தீவு மாவட்டம்
7. கிளிநொச்சி மாவட்டம்
8. யாழ்ப்பாணம் மாவட்டம்
இந்த பிரதேசங்களில் மீண்டும் நாளை (2020.03.24) 2.00 மணி தொடக்கம் மீள அறிவிக்கும் வரையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியில் மக்கள் சன நெரிசல் நிறைந்த பகுதிகளில் கூடுவதை முடிந்தவரை குறைக்குமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது. அதேபோன்று குறித்த காலப்பகுதியில் மதுபானசாலைகளை திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், தடையினை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1. மரக்கறி, பழவகை , ஏனைய உணவு பொருட்கள் மற்றும் ஏனைய அத்தியாவசிய உணவுப் பொருட்கள் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் வாகனங்களில் எடுத்துச் செல்வதற்காக தேவையான அனுமதியை அருகிலுள்ள பொலிஸில் பெற்றுக் கொள்ள வேண்டும்.

2. ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்ட பின்னர் பொதுமக்கள் வர்த்தக நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்யும் சந்தர்ப்பங்களில் நபர்களுக்கு மத்தியில் ஆகக் குறைந்த வகையில் 1மீற்றர் இடைவெளியை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அரசாங்கம் வலியுறுத்தியுள்ளத
இதேவேளை, வட மாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களும், கொழும்பு, புத்தளம், கம்பஹா ஆகிய பிரதேசங்களில் நாளை காலை 6.00 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம் நண்பகல் 2.00 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.

குறித்த காலப்பகுதியில் வட மாகாணத்தில் உள்ள மக்கள் தங்களது பிரதேசங்களை விட்டு வெளியேறத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்குளளான சுவிஸில் இருந்து வருகை தந்திருந்த மதபோதகர் நடத்திய ஆராதனையில் கலந்துகொண்டவர்களை கண்டறிவதற்கான நடவடிக்கை தற்போது வடக்கில் இடம்பெற்றுவருகிறது. இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)