எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி யானை சின்னத்திலேயே போட்டியிடுவதாகவும், அதற்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் கையொப்பமிட்ட கடிதம் ஒன்று கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
வேறு கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவளித்தால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

