ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் போது வாள் வெட்டு!

Rihmy Hakeem
By -
0
யாழ்ப்பாணம் அாியாலை, நாவலடி பகுதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த நிலையில் வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
கள்ளு தவறணையில் உருவான வாய்த்தா்க்கம் மோதலாக மாறிய நிலையில் ஒருவா் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நேற்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் வாள்வெட்டுக்கு உள்ளான நபர், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டிருப்பதுடன், வாள்வெட்டு தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றவரை தேடி வருவதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
(TamilMirror)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)