பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் இன்று மாலைக்குள் அனுப்பி வைக்கப்படும்

Rihmy Hakeem
By -
0

வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதங்களை அனுப்பி வைக்கும் நடவடிக்கைளின் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

70,000 அளவிலான விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றிருந்தாலும், 42,000 அளவான விண்ணப்பங்களே அடிப்படை தகுதிகளைப் பூர்த்தி செய்துள்ளதாக தெரிய வருகின்றது.

இன்று மாலை நேரமாவதற்குள் அடிப்படைத் தகுதிகளைப் பூர்த்தி செய்த சகலருக்கும் நியமனக் கடிதங்களை வழங்கி வைக்க முடியும் என்றும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

நியமனக் கடிதம் கிடைத்து 3 நாட்களுக்குள் தமது பிரதேச செயலகத்திற்கு அறியத்தருவதுடன், 7 நாட்களாகியும் பயிற்சிக்கு சமூகமளிக்காதவர்களின் நியமனங்கள் இரத்துச் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)