சங்கை மிஹ்ராஜே வருக

  Fayasa Fasil
By -
0





கண்ணிய வேந்தர்
காதல் ஹபீப்
காருண்ய நபி
காவலன் அல்லாஹ்வை கண்டிட்ட நன்நாள்

ஈருலகிலம் படைத்து
இரட்சித்து காப்போன்
இறையோனை சந்தித்து
சந்தோஷம் பெற்றிட்ட பொன்னாள்

இறையோனை இரட்சித்து
இறை அன்பு கடலில் தவழ்ந்திட்ட
அருமையான அற்புத நாள்

அருளாளன் அல்லாஹ்வை
அகக்கண்களினால் கண்டு
அகம் எங்கும் மழு மதி போல் ஒளி இழங்கிட்ட திரு நாள்

ஆதி பிதா ஆதம்
நபி முதலிய முன்னோர்கள்,
ஸாலிகீன்களை
கண்டு ஆனந்தம்
பெற்றிட்ட
கண்ணிய நாள்

சுட்டெரிக்கும் நரகம்
சுகம் தரும் சுவனம்
சுபீட்சமான நதிகள்
கண்கள் மயங்கும்
ஹூர்லீன்களாகிய
மங்கைகள்

இதுவரை யாரும் பார்த்திராத காட்சிகள்
அனைத்தையும்
ஓர் இரவில்
கண்டு வந்த
அற்புத நாள்

மா மன்னரை
மா வேந்தர்
மாண்புடன்
மனம் குளிர்ந்து
ஸலாம் கூறி
உள்ளம் மகிழ்ந்த
இனிய நாளே !

வருக !
வருக !
வருக !

அஹ்லன் வஸஹ்லா யா மிஹ்ராஜ் 💐

புண்ணியம் நிறைந்த நன்நாளின் சிறப்பை கொண்டு
இப்புவியில் ஏற்பட்டிருக்கும் பிணியை அழிப்பாய்
யா அல்லாஹ்

ஆமீன் ஆமீன் யா ரப்புல் ஆலமீன் கண்மணி தாஹா பொன்மணி நாயகத்தின் பொருட்டாலும்
ஸாலிஹீன்கள்
பொருட்டாலும்
நல்லடியார்களின்
பொருட்டாலும்

🖊️ பாத்திமா ஷர்மிலா பின்து முஹம்மது நூஃமான் ஆலிமா முஅஸ்கரிய்யா கஹடோவிட்ட

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)