முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவை கைது செய்ய அவரின் பத்தரமுல்ல ரஜமல்வத்த பகுதியில் உள்ள வீட்டுக்கு குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சென்றுள்ளனர்.
குற்றபுலனாய்வு அதிகாரிகள் இன்று (07) காலை ரவி கருணாநாயக்கவின் வீட்டிற்கு சென்றதாக அததெரண செய்தியாளர் கூறினார்.
அங்கு சுமார் 45 நிமிடங்கள் வரை காத்திருந்த குற்றபுலனாய்வு அதிகாரிகள் பின்னர் வீட்டை பரிசேதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
எவ்வாறாயினும் அந்த சந்தர்ப்பத்தில் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க வீட்டில் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 10 பேரை கைது செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று (06) பிடியாணை பிறப்பித்தது.
நீதிமன்றத்தின் ஊடாக பிடியாணை ஒன்றை பெற்று முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, அர்ஜூன் மகேந்திரன், அர்ஜூன் அலோசியஸ், கசுன் பலிசேன உள்ளிட்டவர்களை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பதில் பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.
அதற்கமைய கடந்த நான்காம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சந்தேக நபர்கள் குறித்த விடயங்களை முன்வைத்தனர்.
2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற மத்திய வங்கியின் பிணைமுறி ஏலத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் முறைக்கேடுகள் தொடர்பிலேயே சட்டமா அதிபர் இந்த உத்தரவை பிறப்பித்திருந்தார்.
அதற்கமைய கோட்டை நீதவான் நீதிமன்ற நீதிபதி ரங்க திசாநாயக்க சந்தேகநபர்களை கைது செய்வதற்கான பிடியாணையை பிறப்பித்திருந்தார்.
எனினும் 10 ஆவது சந்தேகநபரான புத்திக சரத்சந்ர என்பவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்க முடியாது என கோட்டை நீதவான் நீதிமன்ற நீதிபதி அறிவித்தமை குறிப்பிடதக்கது.
(அததெரண)