காணி ஒன்றுக்குள் களவாக புகுந்தவரை தாக்கி வைத்தியசாலையில் அனுமதித்த போது குறித்த நபருக்கு கொரோனா இருப்பது உறுதியானது

Rihmy Hakeem
By -
0


பமுனுகம பிரதேசத்தில் காணி ஒன்றுக்குள் களவாக புகுந்த ஒருவரை பிரதேச மக்கள் தாக்கி பொலிஸில் ஒப்படைத்த பின்னர் குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் (05) காலையில் பமுனுகம, தயாலதுர பிரதேசத்தில் ஒருவருக்கு சொந்தமான காணியிலேயே மேற்படி நபர் களவில் நுழைந்துள்ளார்.

பிறகு அவர் பிரதேச மக்களால் பிடிக்கப்பட்டு, தாக்குதலுக்கு உள்ளான நிலையில் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். பொலிஸார் அவரை முதலில் பமுனுகம வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் அவர் ராகமை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் கொரோனா தொற்றுக்குரிய அறிகுறிகள் இருந்ததையடுத்து விசேட பிரிவில் வைத்து பரிசோதித்த போது அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக ராகமை வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)