ரவூப் ஹக்கீம் அவர்கள் முஸ்லிம் ஜனாஸாக்களை வைத்து அரசியல் நடாத்துகின்றார் என்கிற இனவாதிகளின் கருத்தினை வன்மையாக கண்டிக்கிறேன் - UPC யின் பொதுச்செயலாளர் நாஸர் J.P.

Rihmy Hakeem
By -
0

உலக சுகாதார அமைப்பின்  (WHO) சட்டதிட்டங்கள் மற்றும் ஆலோசனைகளை மையமாக வைத்தே இந்நாட்டு முஸ்லிம் சமூகத்தின் சார்பாக கொரோனா வைரஸினால் நோய்வாய்ப்பு ஏற்பட்டு மரணிக்கின்றவர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான அனுமதியை தாருங்கள் என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத்தலைவரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ரவுப் ஹக்கீம் அவர்கள்  அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தது முஸ்லிம் ஜனாஸாக்களை வைத்துக் கொண்டு அரசியல் நடாத்துவதற்கு அல்ல என்பதனை இனவாத சக்திகளும் இனவாத சக்திகளின் கருத்துக்களுக்கு உரம் ஊட்டுகின்ற எமது முஸ்லிம் ஏஜெண்டுகளும் சரியாக புரிந்து கொள்ள வேண்மென ஐக்கிய மக்கள் காங்கிரஸின் பொதுச் செயலாளர் கமால் அப்துல் நாஸர் J.P. தெரிவித்தார்.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)