ரியாஜ் பதியுதீனின் மனு மீதான மேலதிக விசாரணை ஜூலை 31 இல்

Rihmy Hakeem
By -
0


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரரான ரியாஜ் பதியுதீனை விடுதலை செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனு இன்று (06) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

குறித்த மனு மீதான மேலதிக விசாரணைகளை ஜூலை மாதம் 31 ஆம் திகதி முன்னெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ரியாஜின் மனைவியினால் மேற்படி தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

தன்னுடைய கணவருக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்திற்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

தன்னுடைய கணவரை கைது செய்த சந்தர்ப்பத்தில் இரகசிய பொலிஸார் எந்தவொரு காரணத்தையும் தெரிவிக்கவில்லை எனவும் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தவில்லை எனவும் குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் அரசியல் நன்மதிப்பை சீர்குலைப்பதற்காக தன்னுடைய கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)