றிஸ்லி முஸ்தபா கல்வி மற்றும் சமூக நல உதவித் திட்ட அமைப்பின் தலைவர் அவர்களை ஸ்கை தமிழ் குழுவினார் கத்தாரில் சந்தித்தனர்..!

  Fayasa Fasil
By -
0
றிஸ்லி முஸ்தபா கல்வி மற்றும் சமூக நல உதவித் திட்ட அமைப்பின் தலைவர் அவர்களை ஸ்கை தமிழ் குழுவினார் கத்தாரில் சந்தித்தனர்..!

நூருல் ஹுதா உமர் 

றிஸ்லி முஸ்தபா கல்வி மற்றும் சமூக நல உதவித் திட்ட அமைப்பின் தலைவர், மயோன் குரூப் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் றிஸ்லி முஸ்தபா அவர்களை கத்தாரில் இயங்கி கொண்டு இருக்கும் ஸ்கை தமிழ் ஊடகத்தின் பணிப்பளார் ஜே.எம்.பாஸித் மற்றும் உறுப்பினர்கள் நேற்று 01.07.022 (வெள்ளிக்கிழமை) தோஹா ராடிசன் ப்ளூ ஹோட்டலில் சந்தித்தனர்.

அண்மையில் கத்தார் விஜயம் செய்த றிஸ்லி முஸ்தபா கட்டாரில் உள்ள தொழில் வழங்குனர்கள், நிறுவனங்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள், கட்டாருக்கான இலங்கை தூதுவர் உள்ளிட்ட பலரைச் சந்தித்து இலங்கையை சேர்ந்த  இளைஞர்களுக்கு கத்தாரில் சிறந்த தொழில் வாய்ப்பினை ஏற்படுத்தி வரும் முயற்சியை ஜே.எம்.பாஸித் வாழ்த்தினார்.

மேலும் தமது அமைப்பின் மூலமான சமூக செயற்பாடுகளுக்கு ஸ்கை தமிழ் ஒத்துழைப்பு வழங்கும் என்றும் தெரிவித்தார்.
நன்றி : ஸ்கை தமிழ் 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)