பயங்கரவாத தடைச்சட்டம் போன்ற சர்வதேச மனித உரிமைகள் தரங்களுக்கு இணங்காத சட்டங்களைப் பயன்படுத்துவது இலங்கையில் ஜனநாயகத்தை சிதைக்கிறது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
எனவே பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமையை மதிக்குமாறு இலங்கை அரசாங்கத்தை ஊக்குவிப்பதாக அமெரிக்க தூதுவர் ஜூலி சங் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த வாரம் கைது செய்யப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே உட்பட மூவரை 90 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரிக்க, பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ள நிலையிலேயே இந்த வலியுறுத்தலை ட்வீட்டர் பதிவின் மூலம் அமெரிக்க தூதுவர் விடுத்துள்ளார்.